கடந்த ஞாயிறு (20-மே-2004) அன்று கோவையில் நடைபெற்ற தமிழ்வலைப்பதிவர் சந்திப்புக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
2 வாரங்களுக்கு முன்பே ரயிலில் முன்பதிவு செய்ததால் சிரமம் இல்லாமல் பெங்களூரிலிருந்து சென்று வரமுடிந்தது.
சக வலைப்பதிவர்கள் சிலர் விரிவாக கோவை சந்திப்பு பற்றி எழுதிவிட்டார்கள்.
பார்க்க:
http://masivakumar.blogspot.com/2007/05/blog-post_21.html
http://vinaiooki.blogspot.com/2007/05/blog-post_20.html
http://tvpravi.blogspot.com/2007/05/blog-post_9922.html
http://classroom2007.blogspot.com/2007/05/blog-post.html
இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கிட்டதட்ட அங்கு வந்திருந்த அனைவரையுமே (மா.சிவக்குமாரைத் தவிர) தற்போதுதான் முதன்முதலில் நேரில் சந்திக்கிறேன். சிவக்குமாரை கிட்டதட்ட 5 வருடத்திற்கு முன்பு மலேசியாவில் பார்த்தேன். அப்போது இருந்த மாதிரியே தற்போதும் இருக்கிறார் 
வினையூக்கி, சென்சி, பாலபாரதி, மோகன்தாஸ், உண்மைத்தமிழன், வித்யா, செந்தழல் ரவி போன்ற வலைப்பதிவர்களை சந்தித்த மாத்திரத்தில் அவர்களின் சுறுசுறுப்பு என்னையும் தொற்றிக்கொண்டது. நீண்ட நாள் நண்பர்கள் போல் அவர்களுடன் ஒட்டிக்கொள்ள முடிந்தது. ஓசை செல்லாவை சந்திக்க முடியவில்லை என்பது சற்று ஏமாற்றம். பாமரன் அய்யாவின் சமூக அக்கரையுடன் கூடிய கட்டுரைகளை முன்பே படித்திருக்கிறேன். பாமரனை சந்தித்தது எதிர்பாராத மகிழ்ச்சி.
Posted by mugunth at 11:35 PM. Filed under: தமிழ்ப்பதிவுகள்
• Permalink
தமிழ்வலைப்பதிவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. தற்போதைக்கு 1000 க்கும் மேலான (active)தமிழ்ப்பதிவுகள் இருக்கும் என்று கருதுகிறேன். தமிழ்ப்பதிவுகள் தளத்தில் திரட்டப்படுகிற சுமார் 650 பதிவுகள பட்டியல் இங்கே உள்ளது.
அண்மையில் நடைபெற்ற சென்னை தமிழ்வலைப்பதிவர் கூட்டத்தில் சுமார் 50 பேர் கலந்துகொண்டார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ்ப்பதிவுகள் திரட்டியில் பயன்படுத்தும் மென்பொருளை மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் திறமூலமாக்கியுள்ளேன்.
இத்தளத்தில் இதை ஒரு தனிப் புரோஜக்டாக பதிந்துள்ளேன்.
http://code.google.com/p/tamilblogs/
Posted by mugunth at 02:03 PM. Filed under: கணிணி
• Permalink
தமிழ்ப்பதிவுகள் திரட்டியில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளேன். இதுவரை lilina என்ற கட்டற்ற மென்பொருளை பயன்படுத்திவந்தேன். இந்த மென்பொருளில் தரவுத்தளம் கிடையாது, திரட்டப்படும் பதிவுகள் விபரம் அனைத்தும் கோப்புகளாகவே சேமிக்கப்படும். இந்த முறையினால் வேண்டிய மாற்றங்களை செய்யவது கடினமாக இருந்தது.
தற்போது தரவுத்தள வசதியை கொண்டுள்ள lylina என்ற மென்பொருளை அடிப்படையாகக் கொண்டு புதிய தமிழ்பதிவுகள் திரட்டியை உருவாக்கியுள்ளேன்.
பயனரைப் பொருத்தவரை தமிழ்ப்பதிவுகள் தளத்தில் அவ்வளவாக மாற்றங்கள் தெரியாது.
தற்போதுள்ள ஒரே மாற்றம் rss செய்தியோடை முகவரி மாற்றம் தான்.
புதிய செய்தியோடை முகவரி: http://tamilblogs.com/rss.php
நீங்கள் தமிழ்ப்பதிவுகள் செய்தியோடையை உபயோகிப்போராக இருந்தால் செய்தியோடை முகவரியை மாற்றிக்கொள்ளுங்கள்.
மேலும் மாற்றங்கள் சில தினங்களில் ...
Posted by mugunth at 12:19 AM. Filed under: தமிழ்ப்பதிவுகள்
• Permalink
கடந்த சனிக்கிழமை அன்று சென்னையிலிருந்து பெங்களூர் வரை சதாப்தி ரயில் வண்டியில் வரும் வாய்ப்புகிடைத்தது. நான் எதிர்பார்த்ததை விட சதாப்தி ரயில் சேவை சிறப்பாக இருந்தது. அதைப்பற்றிய என் எண்ணங்களை வலைப்பதிவிடவேண்டும் என்று ஆவல் அப்போதே எழுந்தது.
Posted by mugunth at 08:40 AM. Filed under: பொது
• Permalink
தமிழ்விசை என்ற செயலி மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ், தண்டர்பேர்ட் மற்றும் சாட்ஜில்லா அரட்டை செயலிகளில் தமிழ் எழுத உதவும் ஒரு நீட்சி. இது தமிழா அமைப்பின் கூட்டுமுயற்சியில் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வரும் பல்வேறு செயலிகளில் ஒன்று.
எ-கலப்பை போன்ற மென்பொருட்களை தங்கள் கணினியில் நிறுவ தேவையான admin உரிமைகள் இல்லாதவர்களும் இந்த நீட்சியை நிறுவி தமிழெழுத முடியும். மேலும் இது விண்டோஸ், லினக்ஸ், மேக் என்று மொசில்லா இயங்கும் அனைத்து இயங்குதளங்களிலும் பயன்படுத்த முடியும்.
தமிழ்விசையின் பதிப்பு 0.3, 12 டிசம்பர் 2006 அன்று வெளியிடப்பட்டது.
வெளியீடுபற்றிய அறிவிப்பை தமிழ்விசை திட்டத்தின் உறுப்பிணர் கோபி தமிழ்கணிமை மடற்குழுவில் அறிவித்தார்.
Posted by mugunth at 08:29 PM. Filed under: பொது
• Permalink
சிக்கன் குனியா நோயினால் ஒருவராவது பாதிக்கப்படாத குடும்பம் தமிழகத்தில் இருக்கிறதா என்ற அளவுக்கு நிலமை இப்போது இருக்கிறது..
(சிக்கன் குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்).
தமிழக அரசு என்ன இதுவரை செய்துள்ளது என்றால் ... மிகப்பெரிய கேள்விக்குறிதான் மஞ்சுகிறது.
ஆனால் பக்கத்து மாநிலமான கேரளத்தைப் பாருங்கள்.
http://tamilblogs.com தளத்தில் ஒரு புதிய தமிழ்பதிவுகள் திரட்டி நிறுவியுள்ளேன். இது lilina.sourceforge.net தளத்திலுள்ள திறவூற்று மென்பொருளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் என்ன சிறப்பம்சம் என்று கேட்டால் இவ்வாறு பட்டியலிடலாம்:
Posted by mugunth at 04:14 PM. Filed under: பொது
• Permalink
நண்பரின் குழந்தைக்கு பெயர்வைக்க நல்ல தமிழ்பெயர்களை வலையில் தேடும்போது இந்தத்தளம் கண்ணில் பட்டது.
http://www.nithiththurai.com/name/index.html
மிகவும் பயனுள்ள தளம்.
Posted by mugunth at 03:10 AM. Filed under: பொது
No comments • Permalink
தமிழ்மணம்.காம் திரு.காசி கோவையில் 26-ஜூலை-2006 அன்று வலைப்பதிவுகளைப்பற்றி ஒரு கருத்தரங்கை நடத்த உள்ளார். வாய்ப்பு உள்ளவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
மேல் விபரங்களுக்கு காசியின் வலைப்பதிவைப் http://kasiblogs.blogspot.com/2006/07/seminar-on-blogs-at-csi-coimbatorehtml பார்க்கவும்.
Posted by mugunth at 01:16 PM. Filed under: கணிணி
No comments • Permalink
கணினித்தமிழுக்கு பல வகையிலும் சேவை செய்து வந்த நண்பர் உமர் அவர்கள் கடந்த 12-07-2006 அன்று மரணமெய்தினார் என்ற துயரசெய்தி கிடைத்தது.
மறைந்த உமர் அவர்களுக்கு தமிழுலகம் மிகவும் கடன்பட்டிருக்கிறது.
Posted by mugunth at 02:28 PM. Filed under: பொது
• Permalink
தமிழகத் தேர்தல் பிராச்சாரம் முடிவடையும் நிலையில் ஜெயா டிவியில் நேற்று கலைஞரைப்பற்றி ஒரு புது குண்டு போடப்பட்டது.
Posted by mugunth at 12:33 AM. Filed under: அரசியல்
• Permalink
இன்று வலையை மேயும்போது http://www.chicagocrime.org என்ற ஒரு வலைப்பக்கம் என் கண்ணில் பட்டது.
இத்தளத்தில் சிகாகோ வட்டாரத்தில் நடந்த குற்றச்செயல்களை பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள்.
ஆனால் பட்டியலிட்டுவைத்தை ஒரு புதுமையாக நான் புதுமையாக சொல்லவில்லை. ஏற்கனவே இப்பட்டியல் வேறோரு வலைத்தளத்தில் அதாவது சிகாகோ காவல் துறையின் Citizen ICAM என்ற தளத்தில் உள்ளது. அப்படி என்றால் இத்தளத்தில் என்ன சிறப்பு என்று எண்ணத்தோன்றும்.
Posted by mugunth at 01:46 PM. Filed under: கணிணி
No comments • Permalink
இன்று கூகிள் பக்கத்தில் கவனித்திருந்தீர்கள் என்றால் அங்குள்ள கூகிள் சின்னத்தில் செவ்வாய் கிரகப்படம் இருப்பதைக் கண்டிருக்கலாம்.
அதை கிளிக் செய்துபாருங்கள், நீங்கள் செவ்வாய் கிரகத்தை இணையம் வழியாக அடைவீர் !!!
ஆம் இது நிஜம்...இந்த இணைய முகவரிக்கு சென்று பாருங்கள்: http://www.google.com/mars/
Posted by mugunth at 12:00 PM. Filed under: கணிணி
No comments • Permalink
கணினித் துறையில் தமிழ் மொழிப் பயன்பாட்டை அதிகரிக்க செய்ய உதவும் நோக்கத்துடன் ஆரம்பித்துச் செயல்பட்டுக் கொண்டிருப்பது தமிழா! தன்னார்வ குழு.
தமிழாகுழுவின் திட்டங்கள் பற்றியும், கணினி மற்றும் திறவூற்று மென்பொருள் உலகில் நடக்கும் புதியச் செய்திகளைப்பற்றியும் அவ்வப்போது தெரியப்படுத்த ஒரு புதியவலைப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
பார்க்க: http://blog.thamizha.com
Posted by mugunth at 01:18 PM. Filed under: கணிணி
No comments • Permalink